நாட்டில் நான்கு பேர் கொண்ட ஒவ்வொரு குடும்பமும் நாற்பத்தேழு இலட்சத்து இருபத்து நான்காயிரம் ரூபாய் கடனாளியாகியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர்களான வசந்த அத்துகோரள மற்றும் ஓ.ஜி.தயாரத்ன பண்டா ஆகியோரால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசாங்கம் பெற்றுள்ள வரம்பற்ற கடன்களினால் இவர்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் வரை தனிநபர் கடன் தொகை பதினோரு இலட்சத்து பதினெட்டாயிரம் ரூபா என்றும் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் தனி நபர் கடன் ஆறு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாவாக இருந்தது.
இந்த ஆண்டு தனிநபர் உள்நாட்டு கடன் தொகை 6 இலட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் ரூபா என்றும், வெளிநாட்டு கடன் தொகை 4 இலட்சத்து தொண்ணூற்றாயிரத்து எழுநூற்று இருபது ரூபா என்றார்.
,