ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கையை, ஒரு பாடசாலை அணியை போல கையாண்டு, அடித்து நொறுக்கி, கிண்ணத்தை வென்றது இந்தியா.
இலங்கை நிர்ணயத்த 50 ஓட்டங்கள் என்ற இலக்கை, வெறும் 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அடைந்தது இந்தியா.
இன்றைய இறுதிப் போட்டியில் இந்திய 10 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
கொழும்பு ஆர்.பிரேமதாச அரங்கில் நடக்கும் இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.
15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
குசல் மெண்டில் 17, துசான் ஹேமந்த 13, உதிரிகள் 5- இலங்கை தரப்பில் அதிக ஓட்ட விபரம்.
முகமது சிராஜ் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலளித்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களை பெற்றது. இசான் கிசன் 23 (18 பந்துகள்), சுப்மன் கில் 27 (19 பந்துகள்) ஓட்டங்களை பெற்றனர்.