27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
உலகம்

மிகப்பெரிய சோம்பேறி பட்டத்தை வெல்வதற்காக 26 நாட்களாக படுத்திருக்கும் போட்டியாளர்கள்!

பால்கன் நாடான மொண்டினீக்ரோவில், “நாட்டின் மிகப்பெரிய சோம்பேறி” பட்டத்தை வெல்வதற்காக இருபதுக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

மொண்டினீக்ரோ ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே 6 இலட்சம் தான். இந்த குட்டி நாடு இலங்கையர்களுக்கு ஓரளவு பரிச்சயமான நாடுதான். காரணம்- ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணைகளிற்கு இணை அனுசரணை வழங்கும் சில நாடுகளில் இதுவும் ஒன்று!

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஒரு போட்டி நடைபெறுகிறது. நாட்டிலேயே மிகப்பெரிய சோம்பேறி என்ற பட்டத்திற்காக இந்த போட்டி நடக்கிறது. அதன்படி இந்தாண்டும் அங்கே இந்தப் போட்டுத் தொடங்கியுள்ளது.

வடக்கு மொண்டினீக்ரோவில் உள்ள பிரெஸ்னா என்ற ரிசார்ட் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். கடந்த மாதம் ஆரம்பித்த இந்தப் போட்டி 26 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்போர் 24 மணிநேரமும் படுக்கையில் படுத்தபடியே இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து அமரவே அல்லது நடக்கவோ அனுமதி இல்லை.

அவர்கள் படுக்கையில் படுத்திருந்தபடி மொபைல், கணினி பயன்படுத்தலாம். படுத்துக் கொண்டே உணவு மற்றும் கூல் டிரிங்ஸ்களை குடிக்கலாம். 8 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எழுந்து சென்று குளியலறைக்கு செல்ல அனுமதியுண்டு. மற்றும்படி படுத்து தூங்க வேண்டியதுதான்.

இப்படி அதிக நேரம் யார் படுத்திருக்கிறார்களோ… அவர்தான் மிகப்பெரிய சோம்பேறி பட்டத்தை வெல்வார்.

இந்த போட்டியில் 21 பேர் கலந்து கொண்டனர். இருப்பினும், வரிசையாக ஒவ்வொரு நபராக இந்தப் போட்டியிலிருந்து விலகிய நிலையில், இப்போது ஏழு பேர் மட்டுமே இதில் எஞ்சியுள்ளனர்.

இந்தப் போட்டியில் வெல்வோருக்கு 1,070  டொலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த இந்தப் போட்டியில் 117 மணி நேரம் அதாவது சுமார் 5 நாட்கள் படுத்தபடியே இருந்தவர் பட்டத்தை வென்றார். ஆனா்ல, இந்த முறை போட்டி 26 நாட்களை கடந்துள்ளது.

இது குறித்து 2021இல் வெற்றி பெற்றவரும் இந்தாண்டு களத்தில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவருமான டுப்ரவ்கா ஆக்ஸிக் கூறுகையில், “இந்தாண்டு போட்டி கடுமையாகவே இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். இதில் எங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எங்களைக் குழந்தை போலப் பார்த்துக் கொள்கிறார்கள். நாங்கள் சும்மா தூங்கினால் போதும்” என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரியமாக ஒரு மேப்பிள் மரத்தின் அடியில் நடைபெறும், இந்த ஆண்டு நிகழ்வு பாதகமான வானிலை காரணமாக ஒரு மர குடிசைக்கு மாற்றப்பட்டது.

கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டி நடந்து வருகிறது. பொதுவாக மொண்டினீக்ரோ நாட்டை சேர்ந்தவர்கள் சோம்பேறிகள் என்ற பெயர் உண்டு. அதை நக்கலடிக்கும் விதமாகவே இந்தப் போட்டியை அவர்கள் தொடங்கினார்கள். அதுவே இப்போது சீரியான போட்டியாக மாறிவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!