தினைபொங்கல் முதல் மாப்பிள்ளை சொதி வரை: அன்புச்செல்வன்- கீர்த்தி கல்யாணத்தில் தமிழ்ப் பாரம்பரிய விருந்து

Date:

நடிகர் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின் திருமணத்தில் பாரம்பரிய தமிழ் விருந்து பரிமாறப்பட்டது.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் திருமணம் இன்று (13) நெல்லையில் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் இனிதே நடந்தேறியுள்ளது. இதில் திரைப் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இத்திருமணம் முழுக்க முழுக்க குடும்ப விழாவாக நடந்துள்ளது. இதில் உறவினர் என்ற முறையில் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் பங்கெடுத்தனர்.

கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரும் தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார். இவர் தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர், அசோக் செல்வன். ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். சூது கவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான அசோக் செல்வன், தெகிடி, பீட்சா 2, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே ஆகியப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கும் இளம் நடிகர்.

குறிப்பாக, இவருக்கு ரசிகைகளே அதிகம். அண்மையில் இவர் சரத் குமாருடன் இணைந்து நடித்து போர்த்தொழில் கமர்ஷியலாகவும் கதையம்சம் கொண்ட படமாகவும், தமிழ் சினிமாவில் சக்கைப் போடு போட்டு ஹிட்டானது.

இந்நிலையில் நடிகர் அசோக் செல்வனும்,கீர்த்தி பாண்டியனும் இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் சார்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகும், ப்ளூ ஸ்டார் என்னும் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கும்போது, இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. அதனை இருதரப்பு பெற்றோரிடம் சொன்ன அசோக் செல்வனுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டதால், காதல் இனிதே கல்யாணத்தில் முடிவடைந்துள்ளது.

இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க பசுமைக்கும் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நெல்லை மாவட்டம், இட்டேரியில் உள்ள அருண்பாண்டியனின் சேது அம்மாள் பண்ணைத் தோட்டத்தில் எளிமையாக நடந்துள்ளது.

அதேபோல், திருமணத்தில்கூட தமிழ்ப் பாரம்பரிய பசுமை விருந்தே பரிமாறப்பட்டது. அந்த உணவுப் பட்டியல் வைரல் ஆகியுள்ளது.

இருட்டுக்கடை அல்வா,
இளநீர் புட்டிங்,
மங்கோ ஸ்வீட் பொங்கல்,
நார்த்தங்காய் இஞ்சி பச்சடி,
பருத்திப்பால் பாயாசம்,
வெண்டைக்காய் தயிர் பச்சடி,
மரவள்ளி கிழங்கு வடை,
இட்லி,
பீட்ரூட் சந்தகை – மாப்பிள்ளை சொதி,
பலாக்காய் கறி – வாழைக்காய் பூரி,
கிடரங்காய் தொக்கு,
தினைப்பொங்கல்,
கதம்ப சாம்பார்,
தேங்காய் சட்னி,
நீர் தோசை,
கொள்ளு சட்னி,
ராகி அடை,
நெல்லிக்காய் சட்னி,
புளி மிளகாய்,

spot_imgspot_img

More like this
Related

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்