ஓடாவிட்டால் வேலையில்லை: மிரட்டும் அரசு!

Date:

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பை கருத்தில் கொள்ளாது பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள், பணியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்படவுள்ளதாகவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் ரயில் சாரதிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (12) மாத்திரம் 119 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு வெளியிட்டார்.

எவ்வாறாயினும், ரயில் சாரதிகள் சங்கம் இதுவரையில் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடவில்லை எனவும், இந்த நிலையில் இன்று சுமார் 150 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை மாத்திரம் 37 குறுந்துார ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே பொது முகாமையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 32 ரயில் நிலையங்களில் பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே இணை முகாமையாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடருமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று பிற்பகல் செயற்குழு கூடி முடிவெடுக்கும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்