யாழில் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த குடும்பத்தின் வீட்டில் கைவரிசை

Date:

யாழ்ப்பாணம், உரும்பிராயில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து பெருமளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) அதிகாலை இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது.

பிரித்தானியாவிலிருந்து விடுமுறையில் வந்துள்ள குடும்பத்தினர், நேற்று நல்லூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். பின்னர் படுக்கைக்கு சென்றுவிட்டனர்.

வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 55 பவுண் தங்க நகைகளையும், 60 ஸ்ரேலிங் பவுண்ஸ் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்