குழந்தைக்கு பாலூட்டாமல் கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மனைவியை, கணவன் அடித்துக் கொன்றுள்ளார்.
உடுநுவர, வெலம்பொட லொகுஅங்க பிரதேசத்தைச் சேர்ந்த அமலி லக்மினி சேனாநாயக்க என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கணவருடன் மஹியங்கனை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். எனினும், அங்குள்ள இளைஞன் ஒருவருடன் அவருக்கு கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த கணவன், மனைவியை எச்சரித்ததுடன், நேற்று முன்தினம் (5) வசிப்பிடத்தை மாற்றி, மனைவியுடன் வெலம்படை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
வெலம்படையிலுள்ள வீட்டில் இந்த தம்பதியினர் தனித்து குடியேறியுள்ளனர்.
நேற்று காலையில் கள்ளக்காதலனுன் தொலைபேசியில் பேசியுள்ளார். பல மணித்தியாலங்களாக இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது குழந்தை பசியால் அழுதுள்ளது. எனினும் அதையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
கணவன் குழந்தைக்கு பால் கரைத்து பருக்கியுள்ளார்.
மனைவி நீண்டநேரமாக சமையலறையிலிருந்து தொலைபேசியில் பேசுவதால் ஆத்திரமடைந்த கணவன், கையடக்க தொலைபேசியை பறித்து சோதனையிட்டுள்ளார். கள்ளக்காதலனுடனேயே மனைவி பேசிக் கொண்டிருந்ததை அறிந்து, அங்கிருந்த விறகுக் கட்டையால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற போது 28 வயதுடைய கணவர் வீட்டில் இருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் மஹியங்கனை பிரதேசத்தில் ஒரு காணியை எடுத்து வீடொன்றை நிர்மாணித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சகோதரன் கொரியாவில் இருப்பதாகவும் இந்த பெண்ணின் கணவரும் கொரிய பரீட்சையில் சித்தியடைந்து கொரியா செல்ல தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.