இன்றைய வானிலை

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, தெற்கு நோக்கிய தொடர் நகர்வு காரணமாக நாளை வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இன்று நண்பகல் 12.09 மணியளவில் மகொன, பதுரெலிய, கொடகவெல, கித்துல்கோட் மற்றும் மீகஹவெரலிய ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்