ஆசிய கிண்ணம்: சூப்பர் 4 பிரிவில் நுழைந்தது இலங்கை!

Date:

2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற ஆப்கானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 ரன்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ​மெண்டிஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பதும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதேவேளை, சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி தெரிவாவதற்கு 37.1 ஓவர்களில் 292 என்ற வெற்றி இலக்கை கடக்க நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஏற்கெனவே, பங்களாதேஸிடம் தோற்றதால் இந்த நிலை.

அதன்படி, 38 வது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசிய போது இரண்டு விக்கெட்டுக்கள் மீதமிருந்த நிலையில் ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது.

தனஞ்சய டி சில்வா வீசிய முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான்ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தெரிவானது.

அதனை தொடர்ந்து அதே ஓவரில் 4 ஆவது பந்தில் ஃபசல்ஹக் பாரூக்கி ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி 2 ஓட்டங்களால் போட்டியிலும் வெற்றி பெற்றது.

அதன்படி, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நபி 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தெரிவாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்