யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் மனைவி, கடன் தொல்லையால் உயிர் மாய்த்துள்ளார்.
நேற்று (4) பகல் 12.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஓட்டுமடம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், ஜெயராசா அருள்பாலினி (33) என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் 3 பிள்ளைகளின் தாயார்.
கணவர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, சிறு குழந்தை அழும் சத்தம் கேட்டதாகவும், கதவு திறக்கப்படாததால், உடைத்து திறந்தபோது, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், அவரது 11 மாத குழந்தை, தாயாரின் கால்களை பிடித்தபடி அழுது கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீற்றர் வட்டியா வாங்கி சில கோடி ரூபா கடனாளியாகியதாகவும், இதனால் வீடு, சொத்துக்களை இழந்து, தற்போது வாடகை வீட்டில் குடியிருப்பதாகவும் தெரிய வருகிறது.
நேற்று பகல் 11 மணியளவில் கடன் கொடுத்தவர் ஒருவர் வீட்டின் முன்பாக நின்று சத்தமிட்டு பேசிவிட்டு சென்றதாகவும், இதை தொடர்ந்து அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் தெரிய வருகிறது.