மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் மாட்டுபட்டி பகுதியில் மாடு மேய்க்க சென்ற ஆண் ஒருவர் இன்று (05) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கிண்ணியடி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய கந்தையா மாமாங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓமனியா பகுதியிலுள்ள அமைக்கப்பட்டிருக்கும் மாட்டுபட்டிக்கு மாடுகளை மேய்பதற்காக குறித்த நபர் வழமைபோல சம்பவ தினமான நேற்று வீட்டில் இருந்து சென்றவர் இன்று காலையாகியும் வீடு திரும்பாததையடுத்து மாட்டுப்பட்டியின் உரிமையாளர் அந்த பகுதிக்கு சென்று அவரை தேடியபோது மாட்டுப்பட்டிக்கு அருகிலுள்ள பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்