‘நான் என்னை தமிழனாக மட்டும் பார்க்கவில்லை’: முரளிதரன் பயோபிக் ‘800’ ட்ரெய்லர்!

Date:

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘800’. கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் படப்பணிகள் தள்ளிபோனது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சர்ச்சையால் அவர் படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் இப்போது முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை கிரிக்கெட்டர் சச்சின் வெளியிட்டுள்ளார். தமிழில் உருவாகியுள்ள படம் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு டப் செய்யபட்டு வெளியாகியுள்ளது.

இலங்கைப் போரை பின்னணியாக கொண்டு முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. ‘குடியுரிமையே இல்லாத கொத்தடிமை கூட்டத்துல இருந்து வந்தவங்களுக்கு, குடிமகன்ங்குற அங்கீகாரம் கிடைக்குறதே கஷ்டம்’ என்ற வசனம் இலங்கை மலையக மக்களின் நிலைமை குறித்து பேசுகிறது.

தொடக்கத்தில் முத்தையா அவரது பந்துவீச்சினால் பாராட்டப்பட்டதை விவரிக்கும் காட்சிகள் அடுத்து அதே பந்துவீச்சினால் அவர் சந்தித்த சர்ச்சைகளை விளக்குகிறது. அதாவது அவரது முழங்கை நேராக இல்லை என்பதால் அவர் சந்தித்த கஷ்டமான காலக்கட்டம் குறித்தும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுற்றதாக எழுந்த விமர்சனங்களை காட்டும் காட்சிகள் பயோபிக்குக்கான கதையை வலுவாக்குகின்றன. இறுதியில் ‘நான் என்னை தமிழனாக மட்டும் பார்க்கவில்லை’ என அவர் கூறும்போது, ‘பின்ன சிங்களவனா?’ என கேட்க, ‘கிரிக்கெட்டர்’ என முடிக்கிறார்.

ரிலீஸ் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

https://youtu.be/F0N75-1wecg

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்