மாத்தறை, ரொட்டும்ப பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பட்டதாரி பெண்ணை கடத்த வந்ததாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டும்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுதத் பிரசன்ன என்ற 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிப்பவர்.
இறந்தவருக்கும் பட்டதாரிக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், அந்த உறவின் அடிப்படையில் தான் அவரை அழைத்துச் செல்ல வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பட்டதாரியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1