26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 14 பேருக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையில் தமிழர் குடியிருப்புக்களின் மத்தியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் தடைவிதித்ததை தொடர்ந்து, பிக்குகள் காட்டுத்தனமாக செயற்பட்டு, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்குள் புகுந்து கலாட்டா செய்திருந்தனர்.

விகாரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அரச காணிக்குள் பிக்குகள் நுழைய பிரதேச செயலாளர் தடைவிதித்திருந்தார். பிக்களின் கலாட்டாவை தொடர்ந்து, அந்த தடையுத்தரவு விலக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  பெரியவெளி சந்தியில் நாளைய தினம் (03) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், அதற்கு எதிராக விகாராதிபதி தரப்பினரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிசாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட போராட்டத்தரப்பினர் 7 பேருக்கும், விகாராதிபதி உள்ளிட்ட 7 விகாரைக்கு ஆதரவானவர்களுக்கும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வை.முப்லிஹா-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

Leave a Comment