மச்சாளை சுட்டவர் கைது!

Date:

அக்குரஸ்ஸ தெடியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து 25 வயதுடைய பெண்ணை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில்  ஒருவர் கைது செய்யப்பட்டதாக பங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த 25 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த பெண்ணின் சகோதரியின் கணவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் இன்று (29) அதிகாலை அக்குரெஸ்ஸ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட வரைபு தயார் என்கிறது ஈரான்: மறுக்கிறது அமெரிக்கா!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்டெடுப்பது...

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள...

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்