நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயரிட்டது இந்தியா!

Date:

நிலவில் லாண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி பொயின்ட்’ (Shiv Shakti Point) எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக இன்று (சனிக்கிழமை) காலை பெங்களூரு வந்தார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்குச் சென்றார். அப்போது விஞ்ஞானிகள் அனைவரையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடிக்கு லாண்டர் எடுத்தப் புகைப்படங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பிரதமரிடம் லாண்டர் விண்கலனின் மாதிரியை திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வழங்கினார். அவருக்கு பிரதமர் மோடி கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அங்கு விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நிலவில் கால் பதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் பெருமையை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே நிரூபித்துள்ளோம். லேண்டர் தரையிறங்கிய இடம் இனி ‘சிவசக்தி பொயின்ட்’ என்றழைக்கப்படும்.

நிலவில் லாண்டர் தரையிறங்கிய தினம் (ஓகஸ்ட் 23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்” என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லாண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு ‘திரங்கா பொயின்ட்’ எனப் பெயர் சூட்டப்பட்டது என்பதையும் பிரதமர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்