நேற்று கண்டி தலதா மாளிகையின் பெரஹராவின் போது வீதி உலா சென்ற இரண்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பெரஹராவை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கண்டி ஏரி வட்டத்தில் நின்று, யானைகளில் வீதி உலாவை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழுவினர், யானைகளின் அட்டகாசத்தையடுத்து ஏரியில் குதித்தபோது, காவல்துறையின் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
இரண்டு யானைகளும் தலதா வீதி வழியாக ஓடியபோது யானை ஒன்று குயின் ஹோட்டலின் தாழ்வாரத்தில் புகுந்து இடையூறு ஏற்படுத்தியது.
பின்னர், பாகர்கள் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அவற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இடையூறு ஏற்பட்ட இரண்டு யானைகளை அகற்றிய பிறகு, ஏற்பாட்டுக் குழுவினர் ஊர்வலத்தை தொடர்ந்து வீதி உலா வரச் செய்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
