தரையிலிருந்த இந்திய கொடியை எடுத்து சட்டைப்பையில் வைத்த மோடி!

Date:

பிரிக்ஸ் மாநாட்டில் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இந்தியக்கொடி தரையில் இருப்பதை அவதானித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதை எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.

15 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாபிரிக்காவில் நடந்து வருகிறது.

மாநாட்டில் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது, தென்னாபிரிக்க தலைவர் சிரில் ரமபோசாவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மேடைக்கு சென்றனர்.

மேடையில் இந்திய மூவர்ண கொடி தரையில் இருப்பதை அவதானித்த நரேந்திர மோடி, அதை மிதிக்காமல்,  குனிந்து எடுத்து, தனது சட்டைப்பையில் வைத்தார்.

இதை அவதானித்த சிரில் ரமபோசா, அருகிலிருந்த மற்றைய கொடியை எடுத்தார்.

உதவியாளர் ஒருவர் விரைந்து வந்து சிரில் ரமபோசா எடுத்த கொடியை வாங்கிக் கொண்டார். மோடி எடுத்த கொடியையும் வாங்க முயன்றபோது, சிரித்தபடி அதை தவிர்த்தார்.

அத்துடன் தனது சட்டைப் பையில் கொடியை பத்திரப்படுத்தினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்