25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

‘அந்த தமிழ் அரசு கட்சிக்காரரை இயக்கம் ‘பங்கரில் போட்டது’; என்னை சீண்டினால்… சொல்லாததையும் செய்வேன்’: ரஜினியாக மாறும் மறவன்புலவு சச்சி!

“நான் என் பாட்டுக்கு என் வேலையை செய்திட்டு சிவனே என ஒரு வழில போய்கிட்டு இருக்கன். என்னை வம்புக்கு இழுக்காதீங்க. வம்புக்கு இழுத்தா… நான் சொல்றதையும் செய்வன். சொல்லாததையும் செய்வன்“ என ரஜினிகாந்த் பேசும் வசனத்துடனான ரிக்ரொக் வீடியோவை சிவசேனையின் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அனுப்பி வைத்துள்ளார்.

அண்மைய நாட்களால் தமிழ் மக்களில் கணிசமான தரப்பினர் மறவன்புலவு சச்சிதானந்தனையும், சிவசேனை அமைப்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை அவர் மதப் பிரச்சினையாக திசைமாற்ற முயல்கிறார் என்ற நீண்டகால விமர்சனம் இருந்து வருகிறது. இதற்குள் குருந்தூர் மலை விவகாரத்தில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைகளின் விகாராதிபதிகளுடன் இரகசியமாக பேசிவிட்டு, குருந்தூர் மலையில் சிவன் கோயில் கட்ட பிக்குகள் அனுமதி தந்துள்ளதக மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்தார்.

அவரது இந்த நடவடிக்கை, சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பை செயலற்றதாக்கும் முயற்சியென பரவலாக கருதப்படுகிறது.

இதற்கு எதிரைாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆலய நிர்வாகம் கூட, எச்சரிக்கையுடன் கூடிய கருத்தை வெளியிட்டது. முன்னர் சிவன் ஆலயமிருந்த இடத்தில் மீளவும் சிவன் ஆலயம் அமைப்பதென்றால் மாத்திரமே, சிவசேனையின் யோசனைக்கு சம்மதம் தெரிவிப்போம் என குறிப்பிட்டனர்.

முன்னைய சிவன் ஆலயம் இருந்த இடத்திலேயே சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் சிவசேனையின் முயற்சிக்கு ஆலய நிர்வாகமும் சம்மதிக்காது என்பது வெளிப்படையான உண்மை.

இந்த பின்னணியில், தன் மீதான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் தொடர்பில், சமூக ஊடகங்களில் தனது ஆதரவாளர்கள் பகிர்ந்த சில தகவல்களை மறவன்புலவு க.சச்சதானந்தன் தமிழ்பக்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அப்படியான பதிவு ஒன்றில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முல்லைத்தீவு பிரமுகர் து.ரவிகரன் விடுதலைப் புலிகளால் தண்டனை வழங்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க நிதி மோசடிக்காக அவர் புலிகளால் சிறை வைக்கப்பட்டவர் என்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் புலிகளுக்கு மருந்து கடத்திய விவகாரத்தில் சிறையில் இருந்தவர் என்றும் அதில் குறிப்பிப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை விமர்சிக்கும் பதிவொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அம்பிகா இலங்கை அரசின் பதவிகளை ஏற்று, அரசின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்துபவர் என்றும், சச்சிதானந்தன் அரசின் சம்பளத்தை பெற மறுத்து கொள்கைப் பிடிப்புடன் வாழ்பவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ரஜினிகாந்த் பேசும் வசனத்துடனான ரிக்ரொக் வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

east tamil

வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்ல தடை

east tamil

Leave a Comment