Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2023 FIFA மகளிர் உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்

பிபா மகளிர் உலகக்கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது.

அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த ஆட்டத்தில் 29வது நிமிடத்தில் கப்டன் ஓல்கா கார்மோனா கோல் அடித்தார். இங்கிலாந்து இரண்டாவது பாதியில் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், ஆட்டத்தை சமனிலைப்படுத்த முடியவில்லை.

மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஐந்தாவது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது.

2023 FIFA மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஸ்பெயினின் சல்மா பாரலுலோவுக்கு FIFA சிறந்த இளம் வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்தின் மேரி ஏர்ப்ஸ் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை  விருதைப் பெற்றார்.

ஸ்பெயினின் ஐதானா பொன்மட்டிக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

Pagetamil

யாழ் மாநகரசபையில் மணிவண்ணன் தரப்பின் வேட்புமனு நிராகரிப்பு: யாழில் சங்கின் நிலை பரிதாபம்!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் புதிய கூட்டு!

Pagetamil

பிணை இல்லை: தென்னக்கோனுக்கு ஏப்ரல் 3 வரை விளக்கமறியல்!

Pagetamil

மே 6ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்!

Pagetamil

Leave a Comment