130 கி.மீ வேகத்தில் பயணித்த ராகுல்

Date:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பான்காங் ஏரி பகுதிக்கு நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார்.

லடாக்கில் அமைந்துள்ள அழகிய பான்காங் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் 50 சதவீத பகுதி சீன எல்லையிலும் 40 சதவீத பகுதி இந்திய பகுதியிலும் உள்ளன. பத்து சதவீத பகுதி சர்ச்சைக்குரிய இடமாக நீடிக்கிறது.

கடந்த 17ஆம் திகதி லடாக் யூனியன் பிரதேச தலைநகர் லே பகுதிக்கு ராகுல் காந்தி இரு நாட்கள் பயணமாக சென்றார். லடாக்கின் பான்காங் ஏரிக்கு அவர் செல்ல விரும்பியதால் அவரது லடாக் பயணம் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த சூழலில் நேற்று ராகுல் காந்தி லே நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பான்காங் ஏரி பகுதிக்கு சென்றார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பான்காங் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறேன். உலகின் மிக அழகிய பகுதிகளில் இந்த ஏரியும் ஒன்று என எனது தந்தை ராஜீவ் காந்தி கூறியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். பான்காங் ஏரி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் ராகுல் நேற்றிரவு தங்கினார்.

ராகுல் காந்தி மோட்டார் சைக்கிளில் 130 கி.மீட்டருக்கு மேல் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தில்  ராகுல் காந்தி கேடிஎம் 390 அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

காய்கனி வியாபாரிக்கு விருந்து

தலைநகர் டெல்லியின் அசத்பூர் சந்தையில் ராமேஸ்வர் என்பவர் தள்ளுவண்டியில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் தனியார் தொலைக்காட்சி நிருபர் அவரிடம் பேட்டி எடுத்தார். அப்போது ராமேஸ்வர் கூறும்போது, “தக்காளி விலை அதிகமாக இருக்கிறது. இதர காய்கனிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அவற்றை வாங்கி வியாபாரம் செய்ய முடியவில்லை. வெறுங்கையோடு வீடு திரும்புகிறேன்’’ என்று கண்ணீர் மல்க கூறினார். அவர் கண்கலங்கிய வீடியோ வைரலாக பரவியது.

கடந்த 14ஆம் திகதி காய்கனி வியாபாரி ராமேஸ்வர், அவரது மனைவிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்து அளித்தார். இந்த வீடியோவை அவர் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் காய்கனி வியாபாரி ராமேஸ்வருக்கு, ராகுல் உணவு பரிமாறி அவருடன் கலந்துரையாடுகிறார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்