ஹட்டனில் பெண்களை மயக்கி நகை திருடும் கும்பல் சிக்கியது!

Date:

பெண்களை மயக்கி அவர்கள் அணிந்துள்ள தங்க நகைகளை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் ஒன்றின் உறுப்பினர்களை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அண்மையில் ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பெண்ணொருவரின் நகையை திருடிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த கொள்ளை கும்பலை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி ஹட்டன் நகரில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவிற்கு வந்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட மற்றுமொரு பெண், தான் வந்த முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு செல்லலாம் என கூறி அழைத்துச் சென்றுள்ளார். அந்த முச்சக்கர வண்டியில் மேலும் இரண்டு ஆண்களும் பயணித்துள்ளனர்.

பயணித்தின்போது, ​​டிக்ஓயா பகுதியில் வைத்து புதிதாக பயணிக்கும் பெண்ணுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

தண்ணீரை குடித்து பெண் சுயநினைவை இழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் அவரது கழுத்திலிருந்த சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை பவுண் தங்க நகையை திருடிய பின்னர், அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் பெண்ணை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மயக்க நிலையிலிருந்த பெண்ணை அவ்வீதியில் பயணித்த சிலர் டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பான முறைப்பாட்டின் பிரகாரம் ஹட்டன் பொலிஸார் அந்த பகுதியிலிருந்த சிசிரிவி காட்சிகளின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்கள் வந்த முச்சக்கரவண்டியை கண்டுபிடித்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவரையும், அவர்களுக்கு ஒத்துழைத்த பெண் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

திருடப்பட்ட நகை மற்றும் 60,000 ரூபா பணமும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன்ஈ நாவலப்பிட்டி, வட்டவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

27 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேக நபர்கள் இவ்வாறான பல திருட்டுச் சம்பவங்களுடன் பல பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வருபவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...

TGTE’s Tamil Olympics – News

தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! நாடுகடந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்