சம்பிரதாய கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் பிரதிநிதிகள்

Date:

மன்னார் மாவட்டத்தின் கீழ் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை(19) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல் நெறிப்படுத்தலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதி நிதிகள், வன வள திணைக்களை பிரதி நிதிகள்,வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப் படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது பிரதேச செயலாளர்கள், கணி உத்தியோகஸ்தர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் முன்னால் நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டம் ஏற்கனவே காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தொடர்பில் தெரியப்படுத்துவதற்கான கூட்டமாகவே காணப்பட்டது.

அதே நேரம் உள்ளூர் அரச பிரதி நிதிகளினால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் இறுதியான விடுவிப்பு தொடர்பிலும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களை மேலதிக அனுமதிக்காக அனுப்பிவைப்பதற்கான தீர்மானமே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து பாரளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்ட போதிலும் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறான கூட்டங்களுக்கு உரிய விதத்திலும் உரிய நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரச தரப்பு அரசியல் பிரதிநிதிகள் வாய்ப்பு வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்