பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார்.
“சர்வதேச ஆடுகளத்தை விட்டு வெளியேறி, நம்பமுடியாத பயணத்திற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்” என்று பஞ்சாப் இடைக்கால அரசாங்கத்தின் விளையாட்டு ஆலோசகராகவும் இருக்கும் வஹாப் – சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ருவிட்டர்) இல் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), அவரது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள், அணி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் “எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும்” நன்றி தெரிவித்தார்.
வஹாப் பாகிஸ்தானுக்காக 27 டெஸ்ட், 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 T20 போட்டிகளில் விளையாடினார். கடைசியாக 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார்.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34.50 சராசரியில் 83 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 34.30 என்ற சராசரியில் 120 விக்கெட்டுகளையும், ரி20 போட்டிகளில் 28.55 சராசரியில் 34 விக்கெட்டுகளையும் எடுத்தார். அவர் சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 இல் பெஷாவர் சல்மி அணியில் அங்கம் வகித்தார்.
“கடந்த இரண்டு வருடங்களாக எனது ஓய்வைப் பற்றிப் பேசி வருகிறேன். 2023இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எனது இலக்கு. எனது நாட்டிற்கும் தேசிய அணிக்கும் என்னால் முடிந்தவரை சிறந்த முறையில் சேவையாற்றினேன்“ என தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவது “கெளரவம் மற்றும் பாக்கியம்” என்று அவர் கூறினார்.
🏏 Stepping off the international pitch
🌟 After an incredible journey, I've decided to retire from international cricket. Big thank you to PCB, my family, coaches, mentors, teammates, fans, and everyone who supported me. 🙏
Exciting times ahead in the world of franchise…
— Wahab Riaz (@WahabViki) August 16, 2023
இன்று பிற்பகல், வஹாப் லாகூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார், அங்கு எதிர்காலத்தில் பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
இந்த முடிவு இறுதியில் பிசிபியிடம் இருக்கும் என்றும் ஆனால் இளைய வீரர்களுக்கு பயிற்சியளிப்பதை தான் விரும்புவதாகவும் கூறினார். பாகிஸ்தானிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொண்டதால், இளம் வீரர்களுக்கு “மாற்றம்” செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவு “உணர்ச்சி ரீதியானது” அல்ல, ஆனால் “உண்மையில்” வேரூன்றியது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நான் உண்மையில் நம்புகிறேன். பாகிஸ்தான் அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்கள் மிகச்சிறந்தவர்கள். நான் அணியில் விளையாடுவது அநியாயம் என்று நினைக்கிறேன். எனவே இது உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல,” என்றார்.
You will forever be remembered by this spell.
This was an absolute feast for eyes, the thrill of which remains to this day. Happy retirement.
— M (@anngrypakiistan) August 16, 2023




