தமிழ் தேசிய அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் விரைவில் திருமணம்: மற்றொரு இனஐக்கிய திருமணம்!

Date:

க.வி.விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக இலங்கை தமிழ் அரசுக்கட்சி பிரச்சார போரில் ஈடுபட்ட போது, விக்னேஸ்வரனுக்கு  எதிராக சுமத்திய முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று- “சிங்கள சம்மந்தி“.

விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ் அரசு கட்சியின் போர் என வர்ணிக்கப்பட்டது- விக்னேஸ்வரனுக்கு எதிரான சுமந்திரன் அணியின் போரே.

விக்னேஸ்வரனை சிங்கள சம்மந்தி என தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் யாரும் தாக்கியதாக தெரியவில்லை. ஆனால் அந்த தலைவர்களின் தொண்டர்கள் அதையே பிரதான ஆயுதமாக பாவித்தார்கள். தலைவர்களும் அதை தடுக்கவில்லை, கண்டுகொள்ளவில்லை.

இன்றைய இளைய தலைமுறையினர்- அதுவும் குறிப்பாக, கொழும்பில் பிறந்து வளர்ந்த- தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடாற்ற- தலைமுறையினர் இனம் கடந்து திருமணம் செய்வது சாதாரண விடயம். அதை புரிந்து கொள்ளவும் முடியும்.

தீவிர தமிழ் தேசிய அரசியலில் பங்கேற்ற- இனத்துவ அரசியலை வாழ்க்கையாக கொண்டவர்கள்- போராட்ட இயக்க பின்னணியுடையவர்களின் பிள்ளைகள் அனேகர் இப்படியிருப்பதில்லையென்பது உண்மையாயினும், முதலாவது வகையினரின் மாற்றத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகவியலில் அந்த மாற்றமும் ஏற்படக்கூடியதே.

என்றாலும், பின்னர் விக்னேஸ்வரனின் மீதான அந்த குற்றச்சாட்டை தமிழ் அரசு கட்சியினர் கைவிட்டனர். கைவிட்டனர் என்றும் குறிப்பிட முடியாது, அந்த ஆயுதத்தை தாக்க பயன்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர். காரணம்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிழல் தலைவர் எம்.ஏ.சுமந்திரனின் புதல்வர் காதல் மணம் புரிந்தார். அவர் மணமுடித்தது ஒரு சிங்கள பெண்ணை.

இப்பொழுது விக்னேஸ்வரன் மீது சிங்கள சம்மந்தி விமர்சனம் பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை. காரணம், முன்னர் அவர் மட்டும்தான் கூண்டில் ஏற்றப்பட்டார். இப்பொழுது அவர் மட்டும் தனித்து இல்லை.

நாம் சொல்ல வந்த விடயம் அதுவல்ல.

தமிழ் தேசிய அரசியலில் முக்கிய பாத்திரம் வகிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் புதல்விக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மணமகன் சிங்கள இளைஞன்.

அந்த பிரமுகர் யார் என நாம் கூறப்போவதில்லை. திருமணம் தொடர்பாக இரண்டு தகவல்களை மாத்திரம் குறிப்பிட முடியும்.

திருமணம் அடுத்த வாரம் நடைபெறும்.

மணமகளின் தந்தை தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்.

மிகுதி மணமேடையில்!

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்