வடக்கு, கிழக்கிலுள்ள சிங்கள மக்கள் இரண்டாம் தர பிரஜைகளா?: விமல் ஆவேசம்!

Date:

வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டும் வாழவில்லை. அங்கு சிங்கள மக்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளா? அவர்களின் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த  வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (9) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் கருத்து தெரிவித்த போதே, விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்.

“வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தினார். முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துமாறு இப்பொழுது ஹக்கீம் கேட்கிறார். வடக்கு கிழக்கில் இரண்டு இனங்கள் மட்டும்தான் உள்ளதா?

யாழ்ப்பாணத்தில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக 20- 25 பேர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். குருந்தூர்மலையில் பிரச்சினைகள் உள்ளது. வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் இல்லையா? அம்பாறையில் பிரதிநிதிகள் உள்ளனர். திருகோணமலையில் பிரதிநிதிகள் உள்ளனர். வடக்கு கிழக்கில் 2 இனங்கள் மட்டும்தான் உள்ளனவா? அங்குள்ள சிங்கள மக்கள் இரண்டாம் தர பிரஜைகளா?

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும்“ என்றார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில், இந்த கோரிக்கையை இப்பொழுதுதான் வைக்கிறீர்கள். அவர்களுடனும் பேச்சு நடத்துவோம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்

WWE நிறுவனம், அதன் சூப்பர் ஸ்டார் பிரான்சன் ரீட் (Bronson Reed)...

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்