பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து சமையல்காரர் ஒருவர் ஜாம் மற்றும் பாலுடன் வெளியேறும் போது பாராளுமன்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான சமையல்காரர் ஓகஸ்ட் 3 ஆம் திகதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸார், மோட்டார் சைக்கிளில் தொங்கியிருந்த பையை சோதனையிட்ட போது, அதில் ஜாம் மற்றும் பால் இருந்ததை கண்டுபிடித்து சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, திருடப்பட்ட பொதியை அன்று மதியம் மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.




