ஊழியர் வருங்கால வைப்பு நிதி வட்டிக்குறைப்பு: நேற்று எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கில் நடந்தது என்ன?

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் இறுதிக்கட்டத்தின் கீழ் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு (DDR) பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது, எனவே தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் நேற்று (4) உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை வீட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது வட்டித் தொகையை ஒன்பது சதவீதமாகக் குறைக்கும் தீர்மானத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகத் தீர்மானிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனைகளை சமர்பிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான தயாரத்ன இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பொது நிதி தொடர்பான விடயம் எனவும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உரியது எனவும், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், இது தொடர்பில் தலையிடவோ அல்லது உத்தரவு பிறப்பிக்கவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இந்த மனுக்களை விசாரிக்காமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மத்திய வங்கியின் நிதிச் சபையின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டியை ஒன்பது சதவீதமாகக் குறைப்பது அல்லது திறைசேரி பத்திரங்களுக்கு விதிக்கப்படும் வரியை 30 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 11ஆம் திகதி எடுக்கப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார்

இந்த செயல்முறை தொடர்பான முழுமையான உண்மைகளை மனுக்கள் முன்வைக்கவில்லை என்றும், ஆட்சேபனைகள் மூலம் உண்மைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் ஓகஸ்ட் 11ஆம் திகதி அரசு தீர்க்கமான அறிவிப்பை வெளியிடும். எனவே, அதற்கு முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக பரிசீலிக்க தோராயமான திகதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதிபதிகள், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதித்து, ஓகஸ்ட் 8ஆம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. எதிரான ஆட்சேபனைகள் இருந்தால் ஓகஸ்ட் 9ஆம் திகதி தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை பரிசீலிப்பதற்காக ஓகஸ்ட் 10ஆம் திகதி நீதிமன்றத்தை கூட்ட உத்தரவிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்