இன்று யாழ்ப்பாணத்துக்கு புறப்படுகிறது யாழ் நிலா

Date:

கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் இன்று (4) இரவு 10 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து முதன்முறையாக பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ் நிலா என பெயரிடப்பட்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 10 மணிக்கு காங்ககேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மவுண்ட்லவனியா வரை பயணிக்கும்.

சுற்றுலா பயணிகளிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் நிலா ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் ரூ.4000, இரண்டாம் வகுப்பு டிக்கெட் ரூ.3000 மற்றும் மூன்றாம் வகுப்பு டிக்கெட் ரூ. 2000 ஆகும்.

இந்த குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் வரும் 18ஆம் திகதி முதல் தினமும் இயக்கப்படும் என்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்