தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் காணப்பட்ட பெண்ணொருவரின் சடலத்தை கீழே இறக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த இராணுவத்தின் மூன்றாம் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடருக்கு முகாமிடுவதற்காக நேற்று (01) சென்ற குழுவினர், கிரேட் வெஸ்டர்ன் மலையின் ஒருபுறத்தில் உள்ள குன்றின் அருகே பெண்ணொருவரின் சடலம் இருப்பதைக் கண்டு, தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1