4 யாழ் இளைஞர்களின் ஐரோப்பிய ஆசையில் கடைசி நேரத்தில் மண் விழுந்தது!

Date:

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு செல்ல முற்பட்ட ஐந்து இளைஞர்களை நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  (KIA) புறப்பாடு முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புத்தளத்தை சேர்ந்த 24 வயதான ஒரு சந்தேக நபர் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு தோஹாவிற்கும், அங்கிருந்து ஒஸ்திரியாவிற்கும் விமானத்தில் ஏறுவதற்கான கடைசி வாயிலுக்கு வந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்கள் மாலே, மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு விமானம் ஏறுவதற்காக கடைசி வாயிலுக்கு வந்திருந்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைப் பரிசோதனைப் பிரிவினர், சந்தேகநபர்கள் கடைசி நேரத்தில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் மீண்டும் ஆய்வு செய்ததில், கடவுச்சீட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்