லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின் போது இலங்கையின் தேசிய கீதம் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கீதத்தின் வரிகளை சிதைப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாக கருதப்படுவதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக இன்று சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சர்வதேச கவனத்தை ஈர்த்த நிகழ்வொன்றின் போது தேசிய கீதத்தின் வரிகள் சிதைக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக ரஞ்சித் அசோக மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை பாடிய பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச, கீதத்தின் சில முக்கிய வார்த்தைகளை தவறாக உச்சரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
“ஸ்ரீலங்கா மாதா” என்பதற்குப் பதிலாக “ஸ்ரீலங்கா மஹாதா” என்று பாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.




