போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு செல்ல முற்பட்ட ஐந்து இளைஞர்களை நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (KIA) புறப்பாடு முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புத்தளத்தை சேர்ந்த 24 வயதான ஒரு சந்தேக நபர் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு தோஹாவிற்கும், அங்கிருந்து ஒஸ்திரியாவிற்கும் விமானத்தில் ஏறுவதற்கான கடைசி வாயிலுக்கு வந்திருந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலும் நான்கு இளைஞர்கள் மாலே, மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு விமானம் ஏறுவதற்காக கடைசி வாயிலுக்கு வந்திருந்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைப் பரிசோதனைப் பிரிவினர், சந்தேகநபர்கள் கடைசி நேரத்தில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் மீண்டும் ஆய்வு செய்ததில், கடவுச்சீட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




