லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்ப்ட பெரிய இராணிவத்தையில் தீவிபத்தினால் 24 அறைகளை கொண்ட லயன் குடியிருப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
தீவிபத்தை தொடர்ந்து பிரதேச மக்களும், பொலிசாரும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பெரிய இராணிவத்தையின் முதலாம் லயனில் உள்ள 24 வீடுகளே பாதிக்கப்பட்டன. சில வீடுகள் முழுமையாகவும், ஏனையவை பகுதியளவிலும் நாசமாகியுள்ளன.
மின் ஒழுக்கினால் தீவிபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.



