குடாவெல்லவில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் வீட்டின் உரிமையாளர் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி வெட்டுக்காயங்களுடன் கறுப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகுலோகமுவ குடுவெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், 61 வயதுடைய அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரவு குடுவெல்ல பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றதுடன், உயிரிழந்தவரின் மகனுக்கும் குடுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்திற்குப் பிறகு, இறந்தவரின் மகன் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் சிலர் அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றுள்ளனர் .அப்போதும் உயிரிழந்தவரின் மகன் வீட்டுக்கு வராததால் தந்தையையும் தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் விக்டர் சுத்தா மற்றும் ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.




