15 வயது சிறுமி உயிர் மாய்ப்பு!

Date:

பொகவந்தலாவ பகுதியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (23) இரவு எஸ்.பிரியதர்ஷினி என்ற 15 வயது மாணவியே உயிரை மாய்த்துள்ளார்.

மூத்த சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து சென்றதாகவும், தாய் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு சகோதரர்களைக் கொண்ட இந்தக் குடும்பத்தை உயிரிழந்த மாணவியின் மூத்த சகோதரி கவனித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...

கோப்பாய் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு...

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்