பங்களாதேஷ் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியின் பின்னர் இந்திய மகளிர் அணி கப்டன் ஹர்மன்பிரீத் அநாகரிகமாக நடந்து கொண்டதற்கு பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீராங்கனைக்குரிய கண்ணியத்தை வெளிப்படுத்தாமல், சின்னத்தனமாக நடந்து கொண்டார்.
அவருக்கு சர்வதேச போட்டிகளில் தடைவிதிக்க வேண்டுமென இந்திய சமூக ஊடகவாசிகளும் வலியுறுத்தி வருகிறார்கள்.
பங்களாதேஷ்- இந்திய அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனிலையில் முடிந்தது. இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.
இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
பொதுவாக, ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது வழக்கம். ஆனால், போட்டியை நடத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி சமனிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததால், கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.
“Bring the umpires too.”
“Why u r only here? You haven't tied the match. The umpires did it for you. Call them up! We better have photo with them as well.”#HarmanpreetKaur
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 pic.twitter.com/eT1SMf3h7u— वेदीजा (@YgSeni_YuIiya) July 24, 2023
முன்னதாக இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது, சில ஆட்டமிழப்புக்களிற்கு நடுவர்களின் முடிவை, இந்திய வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்தனர். யாஸ்திகா பாட்டியா, மேக்னா சிங் ஆட்டமிழப்புக்களிற்கு அதிருப்தி தெரிவித்தனர். ஹர்மன்ப்ரீத் அவுட் கொடுக்கப்பட்ட பிறகு தனது மட்டையால் ஸ்டம்பை அடித்தார், பின்னர் நடுவர்களிடம் ஏதோ கூறிக்கொண்டு வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில், ஆட்டத்துக்குப் பிறகு கோப்பையை பகிர்தளிக்கும் நிகழ்வின்போது, இந்திய கப்டன் ஹர்மன்பிரீத் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இரு அணி வீராங்கனைகளும் புகைப்படம் எடுக்க தயாரான போது, “ஏன் இங்கே தனியாக இருக்கிறீர்கள்? நடுவர்களை அழைத்து வாருங்கள். நீங்கள் போட்டியை சமன் செய்யவில்லை. நடுவர்கள் உங்களுக்காக அதைச் செய்தார்கள். அவர்களை அழைக்கவும். அவர்களுடன் புகைப்படம் எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும்” என்று பங்களாதேஷ் கப்டன் நிகர் சுல்தானிடம் கூறினார்.
இதனால் கோபமடைந்த சுல்தானா, இந்திய அணியுடன் புகைப்படம் எடுக்காமல் தனது அணியுனருடன் வெளியேறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இதன் பிறகு பேசிய ஹர்மன்பிரீத், ”இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு இங்கு நடுவர்கள் நடந்து கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த முறை நாங்கள் பங்களாதேஷ்க்கு வரும்போது இந்த வகையான நடுவரை சமாளித்து, அதற்கேற்ப எங்களை தயார்படுத்திக் கொள்வோம். நடுவர்கள் அளித்த சில முடிவுகளால் மிகவும் ஏமாற்றமடைந்து உள்ளோம்” என்றார்.
பங்களாதேஷ் கப்டன் நிகர் சுல்தானா பேசும்போது, “இது முழுக்க முழுக்க ஹர்மன்பிரீத்தின் பிரச்சினை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு வீராங்கனையாக, அவர் சிறந்த நடத்தையை வெளிப்படுத்தியிருக்கலாம். என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் எனது குழுவுடன் [புகைப்படத்திற்காக] இருப்பது சரியாகத் தெரியவில்லை. அது சரியான சூழல் இல்லை. அதனால்தான் நாங்கள் திரும்பிச் சென்றோம். கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விளையாட்டு” என்று கூறினார்.
@ICC Should Ban Indian Captain #HarmanpreetKaur For Lifetime. pic.twitter.com/WsujVI88hV
— Bulbul Zilani (@BulbulZilani) July 23, 2023
அmத்துடன், பங்களாதேஷுக்கான இந்திய தூதர் பிரனய் குமார் வர்மாவை மைதானத்தில் இருந்தபோதும் பரிசளிப்புக்கு அழைக்காததற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை ஹர்மன்ப்ரீத் விமர்சித்தார். “இந்தியாவிலிருந்து எங்கள் தூதரும் இருக்கிறார் – நீங்கள் அவரையும் இங்கு அழைத்திருக்கலாம் என்று நம்புகிறேன், ஆனால் அதுவும் பரவாயில்லை.” என்றார்.