யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவு!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...

யாழ் மாநகர சபை முன் மக்கள் போராட்டம்

யாழ். காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தரத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்