எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவிக்கையில், கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை தினமும் இயக்கப்படும் 6 புகையிரதங்களுக்கு மேலதிகமாக இந்த சொகுசு புகையிரதம் சேவையில் சேர்க்கப்படும்.
இந்த புகையிரதம் கல்கிசையில் இருந்து இரவு 10:00 மணியளவில் புறப்படும் . இதில் பயணிக்க டிக்கெட்டின் விலை சுமார் ரூ. 4000 என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.




