கஜமுத்துக்களுடன் இளைஞன் கைது!

Date:

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு வெள்ளிக்கிழமை (14) மாலை கைதானார்.

அம்பாறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்படி இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கிஹான் குணரத்ன மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.எம்.லக்மால் உள்ளிட்ட குழு அம்பாறை பொலிஸ் பிரிவில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் சோதனை நடத்தியது.

இதன் போது யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் கைதானார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்