தனது இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பான மனு வரும் 17ம் திகதி விசாரணைக்கு வருகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின்படி, ஏப்ரல் 25, 2023 அன்று, சேவைத் தேவைகளின் அடிப்படையில் என குறிப்பிட்டு அஜித் ரோஹன உட்பட ஏழு மூத்த டிஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனினும், குறிப்பிட்ட ஒரு டிஐஜியை பொலிஸ்மா அதிபராக்கும் அமைச்சரின் முயற்சியின் அடிப்படையிலான இடமாற்றம் என்றும் விமர்சிக்கப்பட்டது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், இது தொடர்பான உத்தரவு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அல்லது அவர்களின் அனுமதியுடன் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இது சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு முரணானது என்றும், இடமாற்ற உத்தரவை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.




