பொலிசார் 3 முறை தடுத்தும் நிற்காமல் சென்ற யுவதிகள் கைது!

Date:

யுகொழும்பில் மூன்று இடங்களில் பொலிசாரின் உத்தரவை மீறி டிபென்டர் ஓட்டிச் சென்ற மூன்று யுவதிகளை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மருதானை டீன்ஸ் வீதி பகுதியில் கவனக்குறைவாக செலுத்திச் செல்லப்பட்ட டிபெண்டர் வாகனத்தை நிறுத்துமாறு மருதானை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர்  சமிக்ஞை செய்தனர். எனினும், வாகனத்தை செலுத்திய யுவதி, அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பயணித்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

உடனடியாக போக்குவரத்து பொலிசார், வாகனத்தின் பதிவு எண்ணின் அடிப்படையில் வாகன உரிமையாளரை அடையாளம் காண நடவடிக்கை எடுத்தனர்

இதேவேளை, டிபெண்டர் வாகனத்தை மருதானை டெக்னிக்கல் சந்தியில் நிறுத்துமாறு மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு சமிக்ஞை செய்தது.

அதையும் மீறி டிபெண்டர் செலுத்திச் செல்லப்பட்டது.

கெலபொல சந்திக்கு அருகில் இருந்த போக்குவரத்து பொலிசார் அதனை நிறுத்துமாறு சமிக்கை செய்த போது, ​​வாகன சாரதியான யுவதி தொடர்ந்து பயணித்தார்.

இதையடுத்து, பொலிசார் வாகனத்தை விரட்டிச் சென்று, டிரிபோலி ஸ்டேடியம் அருகே நிறுத்தினர்.

அப்போது வாகனத்திற்குள்ளிருந்து இறங்கிய 3 யுவதிகளும், பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டிபெண்டர் வாகனத்தை செலுத்திய இளம்பெண் உள்ளிட்ட மூன்று இளம்பெண்களை கைது செய்த பொலிசார், அவர்களை பரிசோதித்ததில், வாகனத்தை செலுத்திய யுவதி மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.

இந்த 3 யுவதிகளும் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றதும் தெரிய வந்தது.

கைதான யுவதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்