23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இந்தியா

‘எங்கிருந்தாலும் வாழ்க…’: மனைவிக்கும், கள்ளக்காதலனுக்கும் திருமணம் செய்து வைத்த கணவன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தனது மனைவியை மன்னித்து, கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

பீகார் மாநிலம் நவாடா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அங்குள்ள 25 வயது இளம்பெண்ணொருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களின் குடும்ப வாழ்க்கை சுமுகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மனைவிக்கு, கணவனுடன் நெருக்கம் குறைந்துள்ளது. வேலையில் மூழ்கியிருந்த கணவனால் இந்த மாற்றத்தை அவதானிக்க முடியவில்லை.

மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்திக்கவும் ஆரம்பித்தனர்.

கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண்ணின் வீட்டிற்கு கள்ளக்காதலன் வருவார்.

இந்த நெருக்கமான சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார். இருவரும் கதவை பூட்டிக்கொண்டு தனி அறையில் உல்லாசமாக இருந்தனர்.

இதனை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். கதவை தட்டி இளம்பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தனர். அப்போது அவர்கள் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சரமாரியாக அடித்து, அங்குள்ள மரமொன்றில் கட்டி வைத்தனர்.

கிராமத்திலுள்ள பெரியவர்கள் கூடி, இருவரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க தீர்மானித்தனர். இந்த தகவல் வேலைக்கு சென்ற கணவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் அவசரமாக வீடு திரும்பினார்.

தனது மனைவி செய்த துரோகம் அம்பலமானதால் அவர் அதிர்ச்சியடைந்தார். சற்று நேரம் அமைதியாக இருந்தவர், பின்னர் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், “நான் வேலைக்கு சென்ற நேரத்தில் என்னை ஏமாற்றி கள்ளகாதலனை சந்திக்க வேண்டாம். உன் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். நீ சந்தோஷமாக இருக்க வேண்டும்“ என கூறி, அங்குள்ள சிவன் கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார்.

தனது தவறை உணர்ந்த மனைவி குலுங்கிக்குலுங்கி அழுதார். கிராம வழக்கப்பட்டி நெற்றியில் குங்குமமிட்டு கள்ளக்காதலன் திருமணம் செய்தார்.

பின்னர் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு, கள்ளக்காதலனுடன் புறப்பட்டு சென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment