வசந்த் ரவி படத்தில் மெஹ்ரின், அனிகா

Date:

நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை சபரீஷ் நந்தா இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியவர்.

இந்தப் படத்தை ஜெ.எஸ்.எம். புரொடக் ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கின்றனர். வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடிக்கிறார். இவர், தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்தவர். விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், நடன இயக்குனர் கல்யாண் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘சொப்பன சுந்தரி’ படத்துக்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்