பப்ஜி கேமில் மலர்ந்த காதல்: 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானிலிருந்து வந்து இந்திய காதலனுடன் வாழ்ந்த பெண் கைது!

Date:

டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செல்போன் விளையாட்டான பப்ஜியை விளையாடி வந்திருக்கிறார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற பெண்ணும் பப்ஜி விளையாடியிருக்கிறார்.

இந்த நிலையில், கேமிங் பிளாட்போர்ம் மூலம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, அரட்டையடித்து, அது காதலாக மாறியிருக்கிறது. அதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

அதற்காக சீமா குலாம் ஹைதர் என்ற அந்தப் பெண் கடந்த மே மாதம், தன்னுடைய 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, டெல்லியை அடைந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சச்சினும் சீமா குலாம் ஹைதரும் சேர்ந்து கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், நொய்டாவில் பாகிஸ்தானியப் பெண் ஒருவர் வசிப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

காவல்துறை அவர்களை விசாரிக்கும் முன்னரே இந்த தகவலை அறிந்துகொண்ட சச்சின், சீமா குலாம் ஹைதர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வெளியேறவிட்டார்.

ஆனால் காவல்துறை அவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் பிரிஜேஷ், “இருவரும் கணவன் மனைவியாகவே வந்தார்கள். நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தார்கள்.

அவர் பாகிஸ்தானியப் பெண் போலவே தெரியவில்லை. இந்தியப் பெண்கள்போலவே சல்வார் சூட் மற்றும் புடவை அணிந்திருந்திருப்பார். அதனால் எங்களுக்குச் சந்தேகம் வரவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்