பிரமிட் திட்டத்தில் ஏமாந்த ஆசிரியர் பாடசாலைக்குள் உயிர் மாய்த்தார்

Date:

இணையத்தில் இயங்கும் பிரமிட் திட்டத்தில் சிக்கிய வரஸ்முல்ல பிரதேசத்தில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் பாடசாலை விளையாட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீநாத் தர்ஷன் (38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய கல்லூரியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என வரஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆசிரியர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அன்றைய தினம் விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசிரியர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த ஆசிரியர் கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்து பலன் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலிட்டது அவரது மனைவிக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெரியாது என்றும், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வரஸ்முல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்