தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த (1) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிளை நேற்று (2) பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1