புகலிட கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் முடிவு சட்டவிரோதமானது: நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என்று பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ருவாண்டாவை பாதுகாப்பான மூன்றாவது நாடாக கருத முடியாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை தடுப்பதாக உறுதியளித்த பிரதம மந்திரி ரிஷி சுனக்கிற்கு இந்த தீர்ப்பு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

மூன்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இன்று வியாழன் அன்று “ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அகற்றுவது சட்டவிரோதமானது” என்று கூறினர்.

“ருவாண்டாவில் உள்ள புகலிட அமைப்பில் உள்ள குறைபாடுகள், ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட நபர்கள் துன்புறுத்தல் அல்லது பிற மனிதாபிமானமற்ற நடத்தைகளை எதிர்கொள்ளும் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கான உண்மையான ஆபத்து இருப்பதாக நம்புவதற்கு கணிசமான காரணங்கள் உள்ளன” என்று நீதிபதி இயன் பர்னெட் கூறினார்.

ஆனால் அவர், இந்த விஷயத்தில் மற்ற இரண்டு நீதிபதிகளுடன் உடன்படவில்லை என்று கூறினார்.

சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிட கோரிக்கையாளர்களை தடுக்க 120 மில்லியன் பவுண்டுகள் ($148 மில்லியன்) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாட்டிற்கு நாடு கடத்த பிரித்தானியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அகதிகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அரசு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்