27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

கல்லுண்டாயில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் பலி!

யாழ் அராலி வீதியில் கல்லுண்டாய் வெளி புதிய குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இருவர் உயிரிழந்தனர்.

இன்று 1 மணி அளவில் அராலி வீதி, கல்லுண்டாய் சந்தியில் இந்த விபத்து நடந்தது.

அராலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த  அப்பாச்சி மோட்டார் சைக்கிள் மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிளஸர் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (29) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் வாகனம் பழுதுபார்ப்பவர்.

இதில், காயமடைந்த 3 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த மகேஸ்வரன் மதுரன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிரேஷ்ட தாதியராக கடமையாற்றுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

Leave a Comment