டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

Date:

அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரில் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2 வது டெஸ்ட் போட்டியில் 32 ரன்களை எடுத்தபோது இந்த சாதனையை அவர் படைத்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைவான இன்னிங்ஸில் (174 இன்னிங்ஸ்) 9,000 ரன்களை கடந்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். 172 இன்னிங்ஸில் 9,000 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார் குமார் சங்கக்கரா. ராகுல் திராவிட (176 இன்னிங்ஸ்), லாரா மற்றும் பொண்டிங் (177 இன்னிங்ஸ்) ஆகியோர் ஸ்மித்துக்கு அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

34 வயதான ஸ்மித், கடந்த 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,000 இற்கும் அதிக ரன்கள் எடுத்துள்ளார் (லோர்ட்ஸ் டெஸ்ட்டில் 9000 ஓட்டங்கள் கடந்து தொடர்ந்து ஆடி வருகிறார்).

இந்த டெஸ்ட்டில் ஸ்மித் தனது 32வது சதங்ம் அடித்துள்ளார். 38 அரை சதங்களும் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். அவர்து துடுப்பாட்ட சராசரி 60.12.

டெஸ்ட் கிரிக்கெட் அதிக ரன்கள் எடுத்த அவுஸ்திரேலிய வீர்கள்

ரிக்கி பொண்டிங் – 168 போட்டிகள், 13378 ரன்கள்
அலன் போர்டர் – 156 போட்டிகள், 11174 ரன்கள்
ஸ்டீவ் வோஹ் – 168 போட்டிகள், 10927 ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித் – 99 போட்டிகள், 9054 ரன்கள்
மைக்கேல் கிளார்க் – 115 போட்டிகள், 8643 ரன்கள்

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்